எரியும் பட்டத்தரசி :
கடந்த நாற்பது ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் உள்ள அருந்ததியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த கள ஆய்வாகவும் நேரடி சாட்சியாகவும் என் நினைவு வழி கடந்து செல்லும் நூல் இது.
வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் கதை வாழும் போதே எழுதப்பட்டுவிட்ட வரலாறு. அவமதிப்பும் அவமானமும் நம்பிக்கை பறிப்பின் சலிப்பும் ஏற்படுத்திய சங்கடங்களின் துன்பமும் துயரமும் நிறைந்த வெறுப்பும் அதிருப்தியுடன் கூடிய நாள்பட்ட தீராக்கோபமும் சத்திய ஆவேசமும் நிறைந்த உணர்வுப்பூர்வமான எழுத்து என்பதால் கொஞ்சம் இலக்கிய நயம் குறைவு எனக் கருத இடமுண்டு.
ஆனால் போர் புரியக் கத்தி கூர்தீட்டப்பட வேண்டுமேயொழிய அழுகுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதிவிட்டேன் போலும் மேலும் தோல்வியின் விககசிப்பை எப்படி அழகுபடுத்துவது?
வஞ்சிக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்டவர்களின் மீதான தாக்குதல்களிலிருந்து மீண்டெழுந்தவர்களின் கதை – சம அந்தஸ்து கோரிய விடுதலைப் போரின் கதை.