தேவதாஸ்
தேவதாஸின் கண்கள் நீர் தளும்பும் சிறு தடாகங்கள் ஆயின. அவன் உறவுகள் உடையவனாக இருந்தான்; எனினும் எவரும் இல்லை.
அவனுக்குத் தாய் இருக்கிறார்.அண்ணன் இருக்கிறார். மிகுந்த பரிவுகாட்டும் பார்வதி இருக்கிறாள், சந்திரமுகி கூட, அவனுக்கு எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் அவன் எவருக்கும் உரியவனல்ல.
பார்வதி, அவளது பக்கத்துவீட்டு தேவ் அண்ணா இவர்களின் குழந்தை இதயங்களில் தூய காதல் நெய்த சித்திரப்பூத்தையல், வளர்ந்த பருவத்தில் அவர்களது அகங்கார மனங்களாலேயே சிதைக்கப்பட்டபோதிலும், பிரிவின் துயரம் அவர்களுக்குள் ஒரு ஏங்கும் காதலாகிறது. ஒரு துயர இரவின் விடியலில் பார்வதியின் அரண்மனை போன்ற இல்லத்தின் முன்பாக, தேவதாஸின் உயிர்த்துளியை உலர்ந்து மறையச் செய்து, காதல் தன்னை நிலைபேறுடையதாக்கிக் கொண்டது.