பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்
பௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ் நாட்டில் மலர்ந்து வருகின்றது. பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த நூல் மிக்க பயனுடையதாக இருக்கும்.