’டு பாக் டு’...செத்துப் போய் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கடைசி வார்த்தைகள்...அது ஒரு தடயமா அல்லது குற்றச்சாட்டா அல்லது அர்த்தமற்ற குழப்பமா?
இந்த மர்மத்தை விடுவிக்க ‘ஐபி’யின் ஜாயின்ட் டைரக்டர் சித்தார்த்தா ரானா தன் மூளையைப் பிசைந்து கொண்டார்.
தெளிவற்ற தடயங்களை வைத்துக் கொண்டு அவர் காலத்திற்கு எதிராக போட்டியிட்டு தீவிரவாதிகளின் அதிபயங்கர குறிக்கோளை முறியடிக்க வேண்டியிருந்தது.புராணக் காலத்திய பேர் ஊழி போன்ற அழிவை இந்திய எதிர்நோக்கியிருந்தது.
இந்தக் கதை கண்டங்களைத் தாண்டி தாவும்.தீவிரவாதிகளின் சிக்கலான சதித்திட்டங்களின் மையத்திற்கு உங்களை இட்டுச் செல்லும்.அறிவியல் மற்றும் உயர் தொழில்நுட்பக் கருவிகளை பற்றிய விளக்கம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.அதே சமயத்தில் மனம் கணக்கிட முடியாத வேகத்தில் சொல்லப்பட்ட இந்தக் கதை மூச்சை நிறுத்தும் துணிவைப் பற்றியதும் கூட,கதையின் மையத்தில் உறவுமுறைகளின் அழகைப் பற்றியும் சொல்லப்படுகிறது.
தேசிய எல்லைகளையும் வரலாற்று பகைமைகளையும் கடந்த உறவுமுறைகள் பற்றிய காவியம்...