அரண்மனை
கும். வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை. கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமைத்த்து எனச் சொன்னால் மிகையாகாது, புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலக்கட்ட்த்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது.
இந்த நாவலில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளூமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியவன படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஏழைகள், சுரண்டப்படுவோர், பெண்களின் வேட்கை ஆகியவற்றுக்கு அடையாளமாக விளங்கும் சாம்பவி தனக்கு இருக்கிற ஆற்றலை வழங்குவதால் மக்கள் முன்னேற்றத்தில் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள், மறுபக்கம் ஆங்கிலேய அதிகாரயான தாமஸ் மன்ரோ அரசியல் காய்களை நகர்த்தியபடி குடிகளுக்கு நன்மைகள் பல புரிந்து மக்கள் மனங்களில் நிலைக்கின்றன. இதனால்தான் கன்னட நாவலை தாமஸ் மன்றோவுக்கு அர்ப்பணித்துள்ளார் கும். வீரபத்ரப்பா.
2013 சாகித்திய அகாதெமி மொழொபெயர்ப்புப் பரிசனை வென்றவர்.