வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள். இருவேறு காலங்கள். அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இந்நாவல் இன்றையே தொன்மைத் தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கிறது.