சீதா (வின்) பதி
வித்யபதி, இந்திரா இவர்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்த தருணத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் நிச்சயித்த சீதாவை மணம் புரிகிறான் வித்யாபடி. அவனுக்கு விருப்பம் இல்லாத போதும் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டிய நிர்பந்தம்.
கணவன் வித்யாபதி தன்னை விரும்பி மணக்கவில்லை என்பதும், அவனும், இந்திராவும் காதலர்கள் என்ற விஷயமும் திருமணம் ஆன அன்றே சீதாவுக்குத் தெரிய வருகிறது. கணவனை விட்டு விலகவும் முடியாமல், அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சீதா தத்தளிக்கிறாள்.
சீதா மற்றும் இந்திராவின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளும், வித்யாபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன. இறுதியில் இந்திரா வித்யாபதிக்கு எழுதும் கடிதம் வாசகர்களின் மனதில் சாசவதமாக நிலை பெற்றுவிடும் என்றால் அது மிகையில்லை.