ஆனால் அவர்களுடைய “சகோதர கோஷ்டிகளோ”, “நேச விருந்துகளோ”, ”ஒருவரை ஒருவர் நேசியுங்களோ” அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அவன் அவன் தான், தனி ஒரு மனிதன். சிலுவையில் அறையப்பட்ட கடவுளின் மகனான அந்த மனிதர்கூட அவனைத் தனி மனிதனாகத்தான் அங்கீகரித்திருக்க வேண்டும். அவன் தன் தனிமையை மறக்கவேயில்லை. அவர் சிஷ்யர்களைப் போல அவன் அவருக்கு அடிமைப்பட்டவனல்ல; அவருக்காகப் பாடிக்கொண்டோ பிரார்த்தனை செய்து கொண்டோ பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவன் அல்ல. அவன் பாரபாஸ்.