நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய - ஆன்மிகத் தேடலில்
ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘ பாப்பாப் பாட்டில் பகவத்கீதை’ என்ற இவரது ஆய்வு நூலை விஜயா பதிப்பகம் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து ‘ சொல் பொருள் அறிவோம்’ என்ற தமிழ்ச் சொற்களைப் பற்றிய இவரது நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. படித்த இலக்கியம்,
கேட்ட திரைப்பாடல்கள், மனம் கண்டு கொண்ட தரிசன்ங்கள் என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இவரது நாஙாவது
நூலான ‘ நினைவின் நீரோட்டம்’.