கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு வரலாற்றைத்தான் ஒவ்வொருவரிடமும் பதித்துவிட்டுச் செல்கிறது. அதை வாசிக்கவும் உள்வாங்கவும்தான் நாம் மறுக்கிறோம். நல்ல வேளையாக ப்ரியாதம்பி அந்தத் தவறை செய்யவில்லை. பதிலாக பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் தன் மகள் மின்னு தன்னிடமும், பிறரிடமும் எழுதிச் சென்ற சரித்திரத்தை அப்படியே அள்ளி ஆவணமாக்கியிருக்கிறார். தன் மகளை சிநேகிதியாக அவர் பார்த்திருப்பதும் பாவித்திருப்பதும்தான் இந்த நூலின் சிறப்பம்சம்.