இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்தரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை. வரலாற்றின் கோர முகத்தை, போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்தரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன் பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை.ஜப்பானியப் போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன்கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.