தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பேசும் ஐந்து மண்டலங்களில் கொங்கு நாடும் ஒன்று. வளம் நிறைந்த உள்ளூர் மரபைக்கொண்டுள்ள இந்த நிலப் பகுதியில் சாதி அமைப்பு இன்னமும் இருக்கிறது. கொங்கு நாட்டின் கிளைச்சாதிகள் மத்தியில் செயல்படும் பலவித உள் சமுதாய அமைப்புகளுக்குள் நடந்த ஆய்வால் உருவான இந்தப் புத்தகம், எண்ணற்ற அட்டவணைகள், வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களுடன் நிறைவாகக் காணப்படுகிறது. ஒரு பொதுவான கோட்டுச் சித்திரத்தை வழங்கி, விரிவான தரவுகள் இணைந்த இணையற்ற பணியாக விளங்குகிறது; இந்திய இனவரைவியல் அறிவுக்குப் பெரும் பங்களிப்புச் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது.