எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் தோற்றங்களையும் அதையொட்டிய கதைகளையும் சடங்குகளையும் இந்நூலில் அ.கா. பெருமாள் சுவைபடக் கூறுகிறார்.