சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம் - தமிழ் பிராமி எனும் தமிழ் ஆகும். மிக எளிமையான கோடுகளால் தமிழி எழுத்துக்கள் எழுதப்பட்டன. பிறகு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வட்டெழுத்துகள் உருவாயின. தமிழியில் இருந்து வட்டெழுத்துகள் உருவான காலத்திலேயே, இன்று நாம் பயன்படுத்தும் நவீன தமிழ் என இரண்டு எழுத்து முறைகளும் புழக்கத்தில் இருந்தன. அக்காலத்தில் வட்டெழுத்துகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
நம் நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தமிழின் தற்கால எழுத்து வடிவம் தெரியும். நாம் இப்போது படிக்கப்போகும் தமிழ் எனும் பழங்கால எழுத்துகள் பெரும்பாலாருக்குத் தெரியாது. ஏழு நாட்கள் எழுதிப் பழகினால் போதும், தமிழியைக் கற்றுக்கொள்ளலாம். தற்காலத் தமிழ் போல இல்லாமல் எழுதுவதற்கு எளிமையாகவும், எழுத்துகள் குறைவாகவும் இருக்கும் தமிழியை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.
No product review yet. Be the first to review this product.