கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந்த நூலில் மெய்யியலின் ஒரு பகுதியாக வைத்து விவாதிக்கிறார்.
இந்திரனைப் பொருத்தவரை தமிழ் நிலத்தின் ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், நவீன கால ஓவியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இவற்றின் வழியே தெரிகிற அழகியலைத்தான் இந்த நூலில் எடுத்துச் சொல்கிறார். தமிழகத்துக் கைவினைகள் பற்றி விரிவான ஆய்வுக்கு இடம் இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். மேற்கத்திய நவீன கலை என்ற நோக்கோடு தமிழர்களின் கலைப் பண்பாட்டை இங்கு ஆராய்கிறார்.
No product review yet. Be the first to review this product.