தமிழில் ஒப்பிலக்கியத் துறை வளர்ந்துகொண்டு வருகின்றது. ஒரே மொழிக்குள் உள்ள இலக்கியத்தை ஒப்பிடுவது; இந்திய மொழி இலக்கியத்தோடு ஒப்பிடுவது போன்ற வகைகளில் ஒப்பிலக்கியம் விரிந்த தளத்தைக் கொண்டதாகும்.
இலக்கியத்தை ஒப்பிட்டுக் காண்பது ஓர் அரிய பணி. ஒப்பிலக்கியத் துறை தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது ஒரு வகை. பல்கலைக்கழகம் சாராத தமிழறிஞர்களிடையே ஆர்வ நாட்டம் காரணமாக ஒப்பிலக்கிய நோக்கு விரிவடைவது இன்னொரு வகை.
எழுபது ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஒப்பிலக்கியத்தின் தொடக்க கால வரலாறு அமைகிறது. கடந்த முப்பது ஆண்டுகளின் இறுதியில் ஒப்பிலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. இந்தக் கால கட்டத்தில்தான் அது வளர்ச்சி கண்டது. பின்பு அத்துறையில் ஈடுபாடு கொண்ட கல்வி நிறுவனம் சார்ந்த / சாராத நிலைகளில் அது மேலும் வளரத் தொடங்கியது.
No product review yet. Be the first to review this product.