புவனேஸ்வர் ராஜா - ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது. பின் தொடர்கிறார் ஃபெலுடா, அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது. இந்தக் கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில் ஒரு கொலையாளி.