தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் 1944’, ‘இந்தியா 1948’ என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட படைப்பு. அசோகமித்திரனின் விருப்பப்படி இரண்டு குறுநாவல்களும் இணைக்கப் பட்டு ஒரே நாவலாக தற்போது முதல் முறையாக பிரசுரிக்கப்படுகிறது. கால நீட்சியில் மங்கிப்போன நினைவுகளை மீட்டெடுப்பதன்மூலம் அசோகமித்திரன் மனிதர் களையே, அவர்களது போராட்டங்களையே முன்வைக்கிறார்.