உலக அளவில் ஏற்றுமதி தொழில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.இதில் இந்தியாவின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதால்,உலகப் பார்வை இந்தியாவின் மீது திரும்பி உள்ளது.இந்த வளர்ச்சியானது ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
முதல்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள் சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி,நன்குய் அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும்.தரமாக பொருளைத் தயாரித்தால் உங்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் கிடைக்கும்.
பழங்கள்,காய்காறிகள் எளிதில், உடையும் தன்மையுள்ள முட்டை ஆகிய உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்யும்போது பேக்கிங் செய்யப் பயன்படுத்தும் பொருள்களும் தரமாக,சுத்தமாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். மிக முக்கியமாக,அட்டைப் பெட்டி அல்லாத பைகளில் பிரிண்ட் செய்யப் பயன்படுத்தும் இங்க் முதற்கொண்டு தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
No product review yet. Be the first to review this product.