கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்தரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம்.இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன்.
ஒரு நாளைப்போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடுகள்தாம் அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்கள்.