குழந்தைகளை வாசிப்புப் பழக்கத்தின்பால் ஈர்க்கும் பொருட்டு,நாம் அன்றாடம் பேசும் மொழியிலும்,குழந்தைகளின் கொச்சை மொழியிலும் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.ஒரு தாத்தாவோ அல்லது பாட்டியோ தங்கள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்கையில் எந்த மொழியில்,எந்த பாணியில் சொல்வார்களோ,அதே முறையில் எழுதப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியே வந்து கதை சொல்வது போல எண்ணிக்கொள்வார்கள்.இந்த நாவல் குழந்தைகள் மட்டும் படிக்க அல்ல.பெரியவர்களும் படித்து குழந்தைகளின் உலகத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்ளலாம்.தாங்கள் படித்ததை அப்படியே குழந்தைகளுக்குச் சொல்லலாம் அல்லது சத்தம் போட்டு குழந்தைகளுக்கு எதிரிலேயே படித்துக் காட்டலாம்.