கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.
கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.
அதைக் கொட்டி இதைத் தேடி என்று இறுதியாக மஞ்சள் மெழுகெடுத்து கடலுக்குத் தீட்டினாள்.
பதறிப்போனவனாக கடல் நீலமாச்சே என்கிறேன்.
“இல்ல,கடல் யெல்லோதான்.”
“டிவில எல்லாம் பார்க்கிறதானே,நம்ம ஊரு கடலெல்லாம் நீலமாத்தான இருக்கு?”
“இல்ல கடல் யெல்லோதான்.நம்ம ஊரு கடல் தான் தப்பு.”
என்றவாறே தனது கடலை நான்காக மடித்து தனது கணக்கு நோட்டில் பத்திரப் படுத்திக்கொண்டாள்.