அண்டாமழை சிறார் இலக்கியத்தில் ஒரு புதிய வகைமையை அறிமுகம் செய்கிறது. சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள் இவை. அதிகாரத்தை பகடி செய்யும் இந்த கதைகள் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கும்.
மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புணர்வை, ஒற்றுமையின் உன்னதத்தை, உழைப்பின் வலிமையை, மக்களை திட்டங்களைப் போட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுகிற, போலி அறிவியலை கேலி செய்கிற, வீணில் உண்டு களிப்பவர்களைப் பற்றி, மக்களை ஏமாற்றுகிற ராஜாவின் திட்டத்தை பற்றி, இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாத ராஜா போலி வியாபாரத்தை முன்னெடுப்பதை பற்றி, என்று ஒவ்வொரு கதைகளும் ராஜா ராணி மந்திரிகள் கதாபாத்திரங்கள் மூலம் சமகால நடைமுறை உலகத்தைப் பற்றிய பார்வையுடன் எழுதப்பட்ட சிறுவர் கதைகள் இவை. தமிழில் இத்தகைய வகைமையில் இந்த நூலே முன்னோடி.