300 குட்டிக் கதைகள்
திண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர் ஒரு சேசு சபைத் துறவி.
உழைப்பாளர் சட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் வீடியோ தொடர்பியல் ஆகியவற்றில் முதுபட்டயங்கள், இதழியல் – சமூகத் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இளமுனைவர் பட்டங்கள், நாட்டுப்புறவியலில் இளமுனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளவர்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பணிசெய்பவர்.
’150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் வைகறை பதிப்பகத்தில் வெளிவந்துள்ள இரு தொகுதிகளைத் தொடர்ந்து வந்துள்ள புதிய 300 குட்டிக் கதைகள் இவை.
தமிழகம் முழுதும் சுற்றித்திர்ந்து சிறார்களிடமிருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பது இவரது ஆய்வு ரீதியான பொழுதுபோக்கு. இதுவரை 6,000 கதைகளுக்கு மேல் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
இதுவரை 18 புத்தகங்களைப் படைத்துள்ள இவர், ஒரு விறுவிறுப்பான கதை சொல்லி.