நூலாசிரியரிடம் குழந்தைகள் கேட்ட சில கேள்விகளுக்கான பதில்களை, அறிவியல், உண்மை, நடைமுறை சார்ந்து, கற்பனை சுவாரசியத்துடன் கலந்து எழுதிய கதைகள்தான் ‘ஆகச்சிறந்த வீரன்’ என்னும் இந்தப் புத்தகம்.
உதாரணத்துக்கு, ‘எது சிறந்த வீரம்? பெருந்தொற்றால் அபாயங்கள் மட்டும்தானா? வாய்ப்புகள் ஏதுமில்லையா? வெள்ளைதான் உயர்ந்த நிறமா? பிரச்னைகளுக்குத் தீர்வு, வீட்டைவிட்டு ஓடிப்போவதுதானா? ஆன்லைன் திறமைப் பயிற்சி வகுப்புகள் குழந்தைகளுக்குத் தேவையா? வெற்றி மட்டும்தான் எப்போதும் இனிக்குமா?’ என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்கள், நீதிபோதனைகளாக இல்லாமல், உண்மை சார்ந்தும், நடைமுறை சார்ந்தும் கதையில் தேவையான இடங்களில் பிரதிபலித்திருக்கின்றன.
வாருங்கள், பொழுதுபோக்கையும், ?வாசிப்பையும் ஒன்றாக இணைப்போம்; ‘ஆகச்சிறந்த வீரன்’ உங்களை வரவேற்கிறான்.
No product review yet. Be the first to review this product.