சோஃபியின் உலகம்
பதினான்கு வயது சிறுமி சோஃபி அமுண்ட்சென்னுகு ஒரு நாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன். இரண்டும் கேள்விகள். நீ யார்? இந்த உலகம் எங்கிருந்துவருகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. இந்தப் பிரபஞ்சம், இந்த பூமி, இந்த வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன என்ற கேள்வி ஒலிப்பிக் போட்டியில் யார் அதிகம் தங்கப் பதக்கங்களை வென்றார்கள் என்பதைவிட முக்கியமானது என்பதையும் இளம் தலைமுறைக்கு வலியுறுத்த எழுதப்பட்ட நூல் ‘சோஃபியின் உலகம்’.
தமிழில்: ஆர். சிவகுமார், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்