குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம், ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப் பனிந்துபோகிறார்கள். அல்லது மனதளவில் சரியான வளர்ச்சியடையாமல் மனச்சிதைவு அடைகிறார்கள். இந்தப் போராட்டமே தெவையில்லை. ஒரு மேஜிக் நிபுனரைப்போல குழந்தைகள் உலகத்தில் நுழைய ஒரு எளிமையான வழிகாட்டுதல்களையும், அதற்கான சூத்திரங்களையும்தான் இப்புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.