கலாப்ரியாவின் கவிதைகள் பெரிதும் கருத்துத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. அவர் கருத்துகளை முன்வைப்பதற்காக எழுதுவதில்லை. பிரச்னைகளை விவரிப்பதுமில்லை. சூக்குமத் தளத்தில் தத்துவப்படுத்துவதும் இல்லை. மோறாக, ஒரு நிகழ்வுக்போக்காக இயங்கும். வேதியியல் மாற்றம் நிகழும். இருதய நெகிழ்ச்சி மிகுந்திருக்கும். புலன்களெல்லாம் விழிப்புற்றுப் பங்கேற்கும். இப்போது ஓர் உருவங்கொண்டுவிடும் கஞிரின் அகம், கவிதைப் பிரவாகமாகும். உரைநடை மலர்ச்சியாகும், சுவையான உரையாடலாகும்.