யாமினியைப் படித்த பின் பிரிவின் வலியில் தோன்றும் ஏக்கங்களை எப்படி உணர்வுகளால் நெய்வதென்பதை ஆழமாய் யோசிக்க வேண்டியுள்ளது. வாழ்வில் தன்னை எல்லா வகையிலும் புரிந்துகொண்ட யாமினியை சொற்களால் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இது எது போன்ற சரணாகதியென்று தெரியவில்லை. சில வேளைகளில் சிலரின் அன்பின் ஆழத்தை எடுத்துரைக்க முடியாது. அதற்கான சொற்களும் நம்மிடம் போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் யாமினியில் யாமினியின் தீராக் காதலின் வினைகள் தவிர வேறெதுவுமில்லை. இது ஆச்சர்யம்தான். மொழி வழியே ஒரு பெண்ணின் மீதான நேசத்தை இயற்கையின் பாடுபொருளில் இவரால் சொல்ல முடிந்திருக்கிறது. கண்ணீரையும் சின்னச்சின்ன மகிழ்வையும் பிரிவின் ஆற்றாமையையும் ஒரு கவிஞனால்தான் ஆறுதலாயும் ஏக்கமாகவும் எழுதிவிட முடிகிறது.
பதிப்பாசிரியர்
அம்பிகா குமரன்
No product review yet. Be the first to review this product.