மனப்பத்தாயம்,
பஞ்சாரம்,
தெப்பக்கட்டை,
அந்நியர்கள் உள்ளே வரலாம்,
நொண்டிக்காவடி,
ஒரு மரத்துக் கள்,
தெருவாசகம் – ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளின் தொகை நூல் இது
யுகபாரதி – மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகுளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்கமானதெனில் இக்கவிதைகளையும் அவ்வேறே உணரமுடியும். சமூகத்தின் இழி குணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள், வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிதைவற்றுப் போகும் மனிதர்களின் அவலங்களைப் பரிவோடு பேசுகின்றன. எளிமை எனினும் காத்திரமான மொழிநடையும் மனிதர்களின் மீதான கரிசனமுமே இக்கவிதைகளின் கூடுதல் சிறப்பு
யுகபாரதியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகளின் தொகுப்பு