தொல்காப்பியத்தில் காணப்படுகின்ற கருத்துகள் தமிழ்ச் சூழலுக்குரியவையாக இருந்தாலும் இன்று உலக அளவில் வளர்ந்துள்ள மொழி,இலக்கியவியல் சார்ந்த நவீனத் திறனாய்வுச் சிந்தனைகளின் சில புள்ளிகளைக் கொண்டிருக்கின்றன.இந்நூலில் தொல்காப்பியத் திணைக் கோட்பாடும் கவிதையியல் கூறுகள் சிலவும் கருத்தாடல்,எடுத்துரைப்பியல்,கூற்றுக்கோட்பாடு போன்ற நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகள் நோக்கில் ஆராயப்பட்டுள்ளன.