சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்டிய அனைத்தையும் துறக்கும் சீவகன், துறவறத்தை அடைந்து ஞானம் பெறுகிறான். இந்த எளிய கதைக்குள் பொதிந்துகிடக்கும் அறவியலும் அழகியலும் விவரணைக்கு அப்பாற்பட்டவை. சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிய விரும்பும் எவரொருவருக்கும் இது ஓர் ஆதார நூல். ரசிக்க வைக்கும் சீவக சிந்தாமணியின் அழகிய நாவல் வடிவம்.