ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.