சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள இசை சார்ந்த செய்திகளை ஆராயும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
தொல்காப்பியம் காட்டும் ஐவகை நிலங்கள்,அவற்றின் கரு,உரிப்பொருள்கள் ஆகியவை சிலம்பின் கதை ஓட்டத்திற்குப் பொருத்தமாக இடம்பெறும் நிலை குறித்தும்,அக்காலத்தில் நிலவிய இசைக்கலைஞர்களின் வாழ்வியல் முறைகள் குறித்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.ஆடல் தொடங்கப்படும் விதம் அக்கால அரங்க நிகழ்வுகளை அழகுறக் காட்டுகிறது.இசைக் கலைஞர்களின் தகுதிகள் விரிவாக விளக்கப்படுகின்றன.
பிறப்பு முதல் இறப்பு வரை தமிழன் இசையோடு இணைந்த இன்ப வாழ்வு வாழ்ந்தமையை இந்நூல் விளக்கமாக உணர்த்துகின்றன.