வால்மீகியின் ராமாயணத்தோடு, நம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வரும் ராமன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சேர்த்து, தேவி வானமாலி அவர்கள் இந்த ராம காவியத்தைப் படைத்துள்ளார்கள். அன்பு, கடமை, தியாகம் போன்றவை நிரம்பி வழியும் இக்கதை இன்றைய வாசகர்களை மனத்தில் வைத்து சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.