பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகுவதன்மூலம் தமிழர் வாழ்க்கையின் கடந்த காலப் பதிவுகளை அறியலாம் என்பது இன்று பரவலாகி உள்ளது, பின்நவினத்துவ விமர்ச அணுகுமுறை தந்துள்ள ‘மறுவாசிப்பு’ மூலம் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்ததின் விளைவுதான் இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள். எனது விமர்சனப் போக்கு, மரபான பண்டிதர்களுக்கு எரிச்சலைத் தரக்கூடும். பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் பற்றிய சமகால மதிப்பீடுகளை உருவாக்குவதன் மூலம் அவை மீண்டும் புத்துயிர் பெறுகின்றன.