போகன் சங்கரின் ஒரு கவிதை கல்யாண்ஜியை ஒத்திருந்தது சமீபத்தில் வாசித்த கு. உமாதேவியிடம் காணக்கிடைத்தார்கள் . சுகிர்தராணியும் சே, பிருந்தாவும், லேசான மலையாள த்வனியை! கைவிடுவதேயில்லை சுகுமாரன். தேவதச்சன், யுவன். தேவதேவன் பிரமிளின் பிரதம சீடர்கள் போல் 'எண்ணிக்கையிலும் உழைப்பதிலும் மனுஷ்யபுத்திரனுக்கு மாற்று யாரோ? சமயவேலும் சுயம்புலிங்கமும் சமயம் கிடைக்கையிலெல்லாம் சபாஷ் போட வைக்கிறார்கள் விக்ரமாதித்யனை சி, மோகனை வித்யாஷங்கரை விட்டுவிடுவது எளிதல்லஅபிலாஷம் ஆத்மார்த்தியும் அவ்வப்போது பொட்டில் அறைகிறார்கள் என்ன மாதிரியான புத்தியிது ஒருவரில் இன்னொருவரைத் தேடுவது அந்த இன்னொருவரில் இன்னும் இன்னும் ஒருவரைத் தேடுவது?
No product review yet. Be the first to review this product.