ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம். நாடார்களுக்கு ஒரு கொந்தளிப்பு மிக்க, வண்ணமயமான வரலாறு இருக்கிறது. அந்தச் சாதிக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த மோதல்களின் ஊடாக, ஒடுக்கப்பட்ட நிலைமையிலிருந்து தாங்கள் உயர்வதற்காகச் செய்த போராட்டம் கதைப் பாங்கான வடிவங்களை ஏற்றது. தோள்சீலைப் போராட்டம் முதலாக, சிவகாசிக் கொள்ளை ஊடாக, நாடார் மகாஜன சங்கம் வரை, இந்தியச் சமூகத்தின் அணி-திரட்டல் செயல்முறையை எடுத்துக்காட்டும் நாடார்களின் எழுச்சி, மாற்றம் பெறும் ஒரு சமுதாயத்தின் அரசியல் வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்ய வளமான பொருண்மையை அளிக்கிறது.