‘நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா?’ என்று கேட்டுக்கொள்கிறார். கண்ணாடித்தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியர்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையைக் கனவு காண்கின்றன.
இவருடைய கேள்விகள் பிரபஞ்சபூர்வமானவை; நிரந்தரமானவை; எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை விநோதமான, விபரீதமான திசைகளில் சிந்திக்கத் தூண்டுபவை. தட்சிணாமூர்த்தியின் மௌனம்போல.
- எஸ்.வைத்தீஸ்வரன்