யார் குழந்தைகளிடம் தன்னை ஒப்புக்கொடுக்கிறானோ, யார் அந்த உலகத்தில் தன்னுடைய வளர்ந்த உலகத்தை ஒன்றிணைத்து விடுகிறானோ, யார் சதா இந்த உலகத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறானோ, யார் எதையும் எவரையும் சந்தேகிக்கத் தெரியாதவனாக இருக்கிறானோ அவன் ஒன்று மூத்த படைப்பாளிகளில் எனில் யூமா வாசுகியாக, முகுந்த் நாகராஜனாக இருப்பான். புதிய படைப்பாளிகளில் எனில் பாலாஜி தரணிதரனாக இருக்கிறான்.
கல்யாணி.சி
‘பியாக்கமா அது என்ன?’ ஏதோ தின்கிற பொருள் என்று புரிந்தது. என்ன ‘பபிள்கம்’ போலவா என்றெல்லாம் குழம்பினேன். ஆனால் கிட்டத்தட்ட உரைநடை போல ஒலிக்கிற கவிதையில் அதைத் தாண்டி மின்மினிப் பூச்சியின் மறைந்து மறைந்து ஒளிரும் வெளிச்சம்போல ஏதோ ஒன்று இருக்கிறது என்று என் கவிதை மனம் தேடியது. அப்போதுதான் எனக்கு அவர் உலகத்துக்குள் புகுவதற்கான தெறிப்பான நொடி, அற்புதமான கணம் பிறந்தது. அது கவிதைக் கணம். அப்படி வாழ்வின் கணங்கள் எல்லோருக்கும் ஒரு கவிதை மனதைத் தரும். கவிதையின் மகத்துவம் அதுதான். இது வேறெந்த இலக்கிய படைப்புக்கும் வாய்க்காதது.
கலாப்ரியா
No product review yet. Be the first to review this product.