ஸ்ரீரங்கத்து தேவதைகள்:
‘ தேவதைகள் ‘ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ ஏறக்குறைய ஜீனியஸ் ‘- துரைசாமி, கடவுளுக்குச் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஒர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.’