நிலவின் துணையுடன் இரவுகளைக் கொண்டாடும் கவிகளின் பாணியில் தனிமையைத் தூரமாக்க முயற்சிக்கும் ஜே.பிரோஸ்கானின் பதினொராவது தொகுப்பு இந்த “பித்னா” தனது இயல்பான ஆசைகளை, இயலாமையின் பாடுகளை தனக்கான நடையில் வாசகர்களுக்கு தருகிறார். ஆன்மிகத்தோடு பயணிக்கும் இவரது கவிதையினை சொல்லியிருக்கும் விதம் பிடித்தமானதாக இருந்தது. தனியொரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் வெற்றிடங்களை ஏமாற்றங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள கவிதையின் வரிகளை நாடும் கவிஞனின் முகமாக இவரைக் காண்கிறேன். சில வரிகள் கற்பனைகளைத் தாண்டி இவரின் சுயத்தை சுட்டிக்காட்டவும் செய்கின்றன. அவருக்கு எனது வாழ்த்துகளும் அன்பும்...
- பாலைவன லாந்தர்
இந்தியா
No product review yet. Be the first to review this product.