தொட்டதெல்லாம் பொன்னாகும்
சொந்த தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபாரா வெற்றியை உறுதிசெய்துக்கொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெற்ம் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?
வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணதிசையங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள். தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது. ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபாரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகமாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களுடன் விரியும் செரியும் செய்யப்பட்ட புதியப் பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம. வள்ளியப்பனின் இந்த வெற்றிப் புத்தகம்.