: Arial; color: #000000; background-color: transparent; font-style: normal; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap;">உண்மையில் ஒவ்வொரு மனிதனும் கேள்விகளை சுமந்து கொண்டுதான் இருக்கிறான். சிறியதும் பெரியதுமான பதிலற்ற கேள்விகள் ஒரு நீருற்றை போல நமக்குள்; பொங்கி கொண்டுதான் இருக்கின்றன. கேள்வியில்லாத மனிதர்களே இல்லை.கேள்வி ஒரு சாவி அதன் வழியாக திறக்க படும் சாவிகளின் எண்ணிக்கை அதிகம்.
கேள்விகளை பற்றி கொஞ்ச நேரம் யோசிக்கிறோம்.அதற்கான பதில் நம்மிடம் இல்லை,பதிலை தேடுவதற்கான பொறுமையும் விருப்பமும் கூட நமக்கு இல்லை.ஒரு கேள்வி இன்னொரு கேள்வியை எதிரொலிக்கிறது.ஒருவோருகொருவர் கேள்வி கேட்டு கொள்வதில் நமக்கு எப்போதுமே ஒரு விருப்பம் இருக்கிறது.பதில் வெறும் சாதூர்யம் மட்டுமே.
கேள்விகள் எப்போதும் தகிக்க கூடியவை. அதன் வெப்பம் பல நேரங்களில் எத்ராளியின் மனதில் காயங்களை ஏற்படுத்திவிடுகிறது. சில கேள்விகள்,முறிந்த முல்லை போல மனித முள்ளில் தங்கி, ஒவ்வொரு நாளும் வழியை ஏற்படுத்தி கொண்டிருகின்றன. என்னை பார்த்து இப்போடியொரு கேள்வியை கேட்டுவிட்டனே என்று புலம்பும் லட்ச கணக்கில் இருக்கிறார்கள்
வெல்லக்கட்டியை ஒரு எறும்பு கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி தின்பது போல கேள்விகளை சுற்றி சுற்றி வந்து தின்றுவிடவே ஆசை படுகிறேன்.பல நேரங்களில் எறும்பு தன் எடையை விட இரண்டு மடங்கு அதிகமான வெல்லத்தை தூக்கி செல்வது போல, மிகப் பெரிய கேள்வி ஒன்றை என்னோடு இழுத்து கொண்டே செல்கிறேன். கேள்வியை அதன் முன்பின்னும்,சுற்றியும்,உடைத்தும்,சிதறடித்தும் பார்க்க விரும்பும் என் எத்தனிப்பின் விளைவே இந்த கேள்விகுறி.
No product review yet. Be the first to review this product.