பிறக்கும் ஒரு புது அழகு
ஊடகங்களின் அரசியல், அவை பின்பற்ற வேண்டிய அறம், கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவை மக்களோடு கொள்ளும் தொடர்பு, கொள்ள வேண்டிய உறவு என்று வெவ்வேறு கோணங்களில் இந்நூலின் கட்டுரைகள் விவாதங்களைத் திறந்துவிடுகின்றன. ஊடக அரசயலின் பல்வேறு பரிமாணங்களையும் கடந்த பத்தாண்டுகளில் ஊடகங்கள் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிகளையும் தாக்கங்களையும் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன.