மக்கள் சமூகத்தோடு ஒன்று கலந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஓர் மனிதன் திருந்துவதற்கான வாய்ப்பையும் அடைகிறோம் என்பதே பொருள்.
எனவே எந்த நிலையிலும் தண்டனை குறைப்புக்கான வாய்ப்பை அடைத்துவிடுவது மனிதனிலிருந்து மனித தன்மையை அகற்றும் செயலாகும்.இது குற்றங்களைக் கூட்டுமே தவிர குற்றவாளிகளைக் குறைத்துவிடாது.
மொத்தத்தில் இத்தீர்ப்பு உச்சநீதிமன்றமே செய்திருக்கும் அரசமைப்புச்சட்ட கவிழ்ப்பு ஆகும்.
ஆயினும் அரசமைப்புச்சட்ட உறுப்பு 161ன் கீழ் ஆளுநருக்கு அதாவது மாநில அரசுக்கு உள்ள கருணை வழங்கும் அதிகாரம் தடை செய்யப்பட முடியாது,நீதி மன்றக் குறுக்கீட்டிற்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பு கூறியருப்பது ஆறுதல் அளிக்கிற செய்தியாகும்.
இந்த நிலையில் தமிழக அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.