உன்னை மழையாகவும் காற்றாகவும் பறவையாகவும் தருவாகவும் காண்கின்றபோதும் உன்னை இரவாகக் காண்பதில்தான் பெரும் உவகை கொள்கிறேன்.ஆம் நீ முடிவுற்ற இரவுகளால் ஆனவள்.இரவை சுகித்துச் சுகித்து மடிந்த வண்ணமிருக்கிறேன்.வெயில் தொலைந்த பொழுதில் கார்மேகங்கள் மிதக்கும் ஆகாய வெளியில் இருள் வருவதற்கான அறிகுறிகள் தென்படவே எனக்குள் உன்னை இரவாய்ப் பார்க்கும் குதூகலம் பிரவகித்துவிட்டது.