தமிழ் நிலத்திற்கு வெளியிலான தமிழர்களின் கதைகள் என்னும் வகையில் இந்தத் தொகுப்பின் கதைகள் முக்கியமானவை. புதிய நிலங்களில் தம்மை பொறுத்திக் கொள்ள யத்தனிக்கையில் அந்நிலத்தின் மூன்றாம் பிரஜையாய் பார்க்கப்படுவதின் வலிகளையும், ஆன்மா தொலைந்து போன வளர்ந்த தேசத்தின் கான்கிரீட் சாட்சியங்களுமாய் ரத்தமும் சதையுமான மனிதர்களையும் சம்பவங்களையும் அறிமுகம் செய்யும் கதைத் தொகுதி இது.