விழுப்புரம் படுகொலை 1978
1978 ஜூலை 25, 26 தேதிகளில் விழுப்புரத்தில் தலித் அல்லாதோருக்கும் தலித்துகளுக்கும் இடையே பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 12 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தை விசாரிக்க அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷனிடம் தலித் மக்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மாற்று விசாரணை அறிக்கையை சிறுநூலாக ஞி. டேவிட் வெளியிட்டார். அந்நூலைப் புதிய பின்னிணைப்புகளோடு ஸ்டாலின் ராஜாங்கம் பதிப்பித்துள்ளார். விழுப்புரம் படுகொலையைப் பற்றி விரிவான முறையில் வெளியாகும் முதல் நூல் இதுவே.