வியாச பாரதம்!(பெயர்க்குறிப்பு அகராதி)
வாசகர்களுக்கு மனதில் பதிய வேண்டுமென்பதற்காக, உயர்திணைப் பெயர்கள் ஒரு பகுதியாகவும், அஃறிணைப் பெயர்கள் மற்றொரு பகுதியாகவும், பிரித்து எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீமந் நாராயணனின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதார நிகழ்வுகளைக் கொண்டது மகாபாரதம். இக்காவியங்களில் வரும் அத்தனை
பெயர்களும், அவை யார்? என்ன?
என்ற குறிப்புகள் நம் அனைவருக்கும்
தெரிந்திருக்க நியாயமில்லை. ஒரு சில
முதன்மைக் கதாபாத்திரங்களும்,
இடங்களும் மட்டுமே நூல்களில்
படித்தும் பிறர் சொல்லக் கேட்டும்,
நாடகம் மற்றும் ஊடகங்களில்
கண்டும் நினைவில் வைத்திருப்பீர்கள்.
இப்பெயர்களையும் மற்ற
இடங்களையும் முழுமையாக
அனைவரும் தெரிந்து
கொள்ள வேண்டுமென்று ஆவலும்
ஆர்வமும் மேம்பட, அவைகளை
அகர வரிசைப்படுத்தி
உருவாக்கப்பட்டதே
இப்பெயர்க்குறிப்பு அகராதி.